ரஷ்ய ராணுவ கப்பலை சிதறடித்த உக்ரைன் ஏவுகணை: அதிரடி தாக்குதல் காட்சிகள்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பாம்பு தீவின் அருகில் Spasatel Vasily Bekh என்ற ரஷ்ய போர் கப்பல், உக்ரைன் கடற்படை ஏவுகணைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றும் வரும் நிலையில், தற்போதைய போர் நடவடிக்கைகளானது உக்ரைனின் மூலோபாய கிழக்கு பகுதி நகரான செவரோடோனெட்ஸ்க்கில் (Severodonetsk) தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில், ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்கும் பாம்பு தீவின் அருகில் நின்றுக் கொண்டு இருந்த ரஷ்ய போர் கப்பலை உக்ரைனின் கடற்படை குழு அதிரடியாக தாக்கி அழித்துள்ளது.
Ukrainian defenders hit the ship near the Snake Island. On board were the ammunition of the Rashists, weapons and the TOR air defense system.
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 17, 2022
Waiting for the confirmation. pic.twitter.com/4va6ws96Ar
இதுத் தொடரபாக உக்ரைனின் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரஷ்ய படைகளின் கட்டுபாட்டிற்கு கீழ் இருக்கும் பாம்பு தீவிற்கு பணியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுச் சென்ற Spasatel Vasily Bekh என்ற ரஷ்ய கருங்கடல் கடற்படையின் கப்பலை, உக்ரைனிய கடற்படை தங்களது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துள்ளது.
உக்ரைனிய கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்ட அந்த கப்பலில், ராஷிஸ்டுகளின் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் TOR வான் பாதுகாப்பு அமைப்பு போன்றவையும் இருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
Spasatel Vasily Bekh, a tug of the russian black sea fleet, successfully demilitarized by the @UA_NAVY. The ship was transporting personnel, weapons and ammunition to the occupied Snake Island.
— Defence of Ukraine (@DefenceU) June 17, 2022
Moskva never be alone... pic.twitter.com/3slXr6qtEl
இருப்பினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்று நாடுகளுக்கான வேட்பாளர் அந்தஸ்து: ஐரோப்பிய ஆணைக்குழு முக்கிய பரிந்துரை
ஏற்கனவே கருங்கடல் பகுதியில், ரஷ்யாவின் சோவியத் கால போர் கப்பலான மாஸ்க்வாவை உக்ரைனிய கடற்படை அழித்து இருந்த நிலையில், மற்றொரு போர் கப்பலையும் ரஷ்ய படைகள் மீண்டும் இழந்துள்ளது குறிப்பிடதக்கது.