இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 14 வயது சிறுவன்; கதறும் குடும்பத்தினர்.., மியான்மரில் அதிகரிக்கும் பதற்றம்!
மியான்மரில் நேற்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 14 வயது சிறுவனின் உடலை, அவரது குடும்பத்தினர் இன்று கண்ணீர் மல்க தகனம் செய்தனர்.
அவரது உடல் தகனத்திற்குள் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அவரது தாயும் பிற உறவினர்களும் சிறுவனின் தலைமுடியையும் முகத்தையும் இறுக்கி பிடித்தபடி அழுதுள்ளனர்.
நேற்று மிகப் பாரிய பாதுகாப்பு படையினர் திடீரெனெ குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 8 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அப்பகுதியில் குடியிருப்பாளர்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
பிப்ரவரி 1 மியான்மர் இராணுவம் சர்வாதிகாரத்தை கையில் எடுத்ததிலிருந்து நடத்தப்பட்ட போராட்டங்களில், நாடு முழுக்க இதுவரை 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், 2,665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 2,290 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. நாட்டில், மேலும் போராட்டம் வலுவடைந்துவரும் நிலையில் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில், நாட்டில் கொல்லப்பட்டுள்ள னைவருக்காகவும் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள இராணுவ ஆட்சி, அனால் இந்த விபரீதங்களை மக்களின் தேவையற்ற வன்முறை போராட்டம் தான் காரணம் என கூறியுள்ளனர்.