ஊதுபத்தியால் நேர்ந்த விபரீதம் - 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்
ஊதுபத்தியை தவறாக கையாண்டதால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசமாகியுள்ளது.
1,500 ஆண்டு பழமையான கோவில்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் 1500 ஆண்டு கால பழமையான கோவில் ஒன்று உள்ளது.

536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங் (Liang) வம்சத்தில் உள்ள ஃபெங்குவாங் என்பவரால் கட்டப்பட்டது.
இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளை தவறாக கையாண்டதாக கூறப்படுகிறது.
தீ பற்றி எரிந்து நாசம்
இதன் காரணமாக அங்குள்ள கூரையில் தீ பற்றியுள்ளது. இந்த தீ, 3 மாடி தளமுள்ள கோவில் முழுவதும் பற்றி எரிந்துள்ளது.

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. அருகே இருந்த வனப்பகுதிக்கு தீ பரவாமல் இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
முற்றிலுமாக எரிந்து நாசமான கோவிலை மீண்டும் கட்டப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |