பிரான்ஸ் பொலிஸார் துரத்தியதில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது சிறுவன் மரணம்

Police spokesman France Accident Death
By Thiru Aug 06, 2023 11:22 PM GMT
Report

பிரான்ஸில் பொலிஸாரால் துரத்தப்பட்ட போது ஸ்கூட்டரில் வேகமாக சென்ற 16 வயது சிறுவன் மற்றும் அவரது சக பயணி என இருவர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

ஸ்கூட்டரை துரத்திய பொலிஸார்

பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி பொலிஸாரால் துரத்தப்பட்ட பிறகு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்கூட்டரில் சென்ற ஜோடி பொலிஸின் ரோந்தில் இருந்து தப்பிய போது மற்றொரு கார் மீது மோதி உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

16-years-boy-man-killed-after-france-police-chase:பிரான்ஸ் பொலிஸார் துரத்தியதில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது சிறுவன் மரணம் France Télévisions

அத்துடன் மேற்கு பிரான்ஸின் லிமோஜஸில்(Limoges) இருந்து ஸ்கூட்டரை பொலிஸார் துரத்துவதற்கு முன்பு, அப்பகுதிக்கு வந்த சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரை தடுத்து நிறுத்த பொலிஸார் தயாராகி கொண்டிருந்தும் அவர்கள் தப்பிச் சென்று உள்ளனர் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் பொலிஸாரின் துரத்தலுக்கு பிடி கொடுக்காமல் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் போக்குவரத்து சிக்னலின் சிவப்பு ஒளியை பொருட்படுத்தாமல் சாலையில் பாய்ந்துள்ளது, அப்போது அங்கிருந்த கார் மீது மோதி ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் மற்றும் வயது வந்த சக பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

16-years-boy-man-killed-after-france-police-chase:பிரான்ஸ் பொலிஸார் துரத்தியதில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது சிறுவன் மரணம்! France Télévisions

உயிரிழந்த நபர்கள் சக்திவாய்ந்த Yamaha TMAX ஸ்கூட்டரில் சென்றதாகவும், சூழ்நிலையின் ஆபத்தை கருதி விரைவாக அவர்களை மடக்கி பிடித்து துரத்தலை முடிக்க நினைத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் மேல் எங்கள் எண்ணங்கள் உள்ளது என்று லிமோஜஸஸ் மேயர் எமிலி ரோஜர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

16-years-boy-man-killed-after-france-police-chase:பிரான்ஸ் பொலிஸார் துரத்தியதில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது சிறுவன் மரணம்!AP

திரும்பிய அமைதி

கடந்த ஜூன் 17ம் திகதி தான் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவன் நஹெல் கொல்லப்பட்டான். இதனால் பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் தற்போதைய சம்பவம் நடைபெற்ற நகரத்தில் விபத்துக்கு பிறகு சிறிது நேரத்திற்கு சச்சரவுகள் எழுந்தது, ஆனால் அவை தணிந்து அமைதியடைந்து இருப்பதாக Actu17 செய்தி தளம் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US