நடுக்கடலில் மிதந்த 1,600 போதைப்பொருள் பொட்டலங்கள்: அவற்றின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இத்தாலிக்கு அருகே, மத்தியதரைக்கடலில், இரண்டு டன் எடையுள்ள போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1,600 பொட்டலங்கள்
இத்தாலிக்கு அருகே, நடுக்கடலில், 70 பொட்டலங்கள் மிதப்பதை இத்தாலி பொலிசார் கண்டு, அவற்றை சேகரித்துள்ளனர். தண்ணீர் புகாத வகையில் நேர்த்தியாக பிளாஸ்டிக் காகிதத்தால் பொதியப்பட்டிருந்த அந்த பொட்டலங்களை பரிசோதித்தபோது, அவற்றிற்குள், 1,600 சிறிய பொட்டலங்களில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
Picture: DaPress/SplashNews.com
அவற்றின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அந்த போதைப்பொருளின் மதிப்பு, சுமார் 354 மில்லியன் பவுண்டுகளாகும்.
வேறொரு படகு அந்த பொட்டலங்களை சேகரித்துக்கொண்டு கரை செல்வதற்கு வசதியாக, சரக்குக் கப்பல் ஒன்று அவற்றை அங்கு கொண்டு போட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
Picture: AP