திருமணத்திற்கு மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி..விபரீத முடிவெடுத்த 17 வயது மாணவர்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஒருதலைக்காதல்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டேவின் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மனோகர், 10ஆம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால், குறித்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால் மனோகர் கல்லூரிக்கு செல்லாமல், லொறி கிளீனர் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.
@Representational image | ThePrint
இந்த நிலையில் மனோகர் அந்த மாணவியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். தனக்கு 16 வயது தான் ஆவதாகவும், 10ஆம் வகுப்பு படிப்பதாகவும் கூறி குறித்த மாணவி மறுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
இதனால் மனமுடைந்த மனோகர் நேற்று முன்தினம் தான் வேலை பார்த்து வந்த லொறியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது லொறியின் சக்கரம் அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே மனோகர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.