சுமார் 178 மணி நேரத்திற்கு பிறகு…உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி! துருக்கியில் தொடரும் மீட்பு பணி
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 178 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
35,000 பேர் உயிரிழப்பு
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இருநாடுகளையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
இதில் இதுவரை 35,000 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
AP
மேலும் பலர் வீடற்று தெருக்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
178 மணி நேரத்திற்கு பிறகு
இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற முதல் 72 மணி நேரம் “பொற்காலம் போன்றது” என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 178 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் அறிக்கையில், திங்களன்று தெற்கு துருக்கிய நகரமான அதியமானில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மிரே என்ற சிறுமி 178 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
CNN நிருபர், சிறுமிக்கு ஆறு வயது என்றும் மீட்புக்குழுவினர் சிறுமியின் மூத்த சகோதரியை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு முன்னதாக துருக்கிய போக்குவரத்து அமைச்சர் அடில் கரைஸ்மைலோக்லு மிட்கப்பட்ட சிறுமிக்கு நான்கு வயது என குறிப்பிட்டு இருந்தார்.