அமெரிக்க தூதரகம் முன் தீ வைத்துக் கொண்ட 18 வயது இளைஞர்: பொலிஸார் விசாரணை
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே 18 வயது இளைஞர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பரபரப்பு
கோபன்ஹேகனில் (Østerbro, Copenhagen) உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே 18 வயது இளைஞர் ஒருவர், தனக்கு தானே தீ வைத்துக் கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேனிஷ் தலைநகரில் உள்ள டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட்ஸ் அல்லே(Dag Hammarskjölds Allé) தெருக்களில் உள்ள கட்டிடத்தின் முன்னே இளைஞர் ஒருவர் தீ வைத்து கொண்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் அவசரகால படையினர் விரைந்து வந்தனர்.
EPA-EFE/REX/Shutterstock
தீ விபத்து நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் வந்தபோது, அந்த நபர் தீயில் எரிந்து சுயநினைவுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தீக்காயங்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொலிஸார் விசாரணை
18 வயது நபர் தன்னை தானே தீக்குளித்து கொண்ட சம்பவத்தை பொலிஸார் தங்கள் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
EPA-EFE/REX/Shutterstock
அத்துடன் இளைஞர் தீ வைத்து கொண்ட சம்பவத்தில் பல விவரங்களை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இளைஞன் மீது இதுவரை எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Google Maps