குழந்தைகளைக் கடத்தி விற்கும் 18 பெண்கள் கொண்ட கும்பலுக்கு சிறை
குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலைச் சேர்ந்த 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தந்தை அளித்த புகார்
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தோனேசியாவைச் சேர்ந்த டேனி ஹிதாயத் என்பவர், தான் ஒன்லைனில் சந்தித்த பெண்ணொருவர், தன் அனுமதியின்றி தன் குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்தார்.

பொலிஸ் விசாரணையில், டேனி தன் குழந்தையை தத்துக்கொடுக்க சம்மதித்தது தெரியவந்தது.
அதாவது, குழந்தையை வாங்கிக்கொண்ட பெண், தான் சொன்னபடி டேனிக்கு பணம் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை தொடர்புகொள்ளவும் இயலவில்லை. ஆகவேதான் டேனி பொலிசில் புகாரளித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், டேனியின் புகாரால், குழந்தைகளைக் கடத்தும் ஒரு பெரிய கும்பலே சிக்கிக்கொண்டது.
2023க்கும் 2025க்கும் இடையில் அந்தக் கும்பல் 34 குழந்தைகளை வாங்கி விற்றுள்ளது.
அந்தக் கும்பலில் 18 பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர். கும்பலின் தலைவியின் பெயர் Lie Siu Luan.
ஏப்ரல் மாதம் முதல் இந்த வழக்கு நடந்துவந்த நிலையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கும்பலின் தலைவியான Lie Siu Luanக்கு 7 ஆண்டுகளும், கடத்தப்பட்ட குழந்தைகளை கவனித்துக்கொண்ட ஐந்து பெண்களுக்கு மூன்று ஆண்டுகள், நான்கு மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கும்பலின் மற்றொரு முக்கிய நபரான Lai Siu Ha என்னும் பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள், ஏழு மாதங்களும், இடைத்தரகர்களாக செயல்பட்ட இரண்டு பெண்களுக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்களும், குழந்தைகளை கவனித்துக்கொண்ட மற்றொரு பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கும்பலின் ஒரே ஆண் உறுப்பினரான நபருக்கு ஆறரை ஆண்டுகளும், அதிக குழந்தைகள கடத்திய Astri Fitrinika என்னும் பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள், ஏழு மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளை தத்துக்கொடுக்க போலி ஆவணங்கள் தயாரித்த Lai Siu Ha என்னும் பெண் மட்டும் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுத்தவர்கள், தங்கள் குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்னும் அச்சம் தங்களுக்கு உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |