விண்வெளியில் சாப்பிடப்பட்ட முதல் உணவு என்ன தெரியுமா?
பூமியில் இருந்து ஏராளமான விண்வெளி வீரர்கள், ஆய்வு பணிக்காக விண்வெளிக்கு சென்று சில காலம் ஆய்வு பணிகளை முடித்து விட்டு வருகிறார்கள்.
விண்வெளி உணவுகள்
சமீபத்தில் விண்வெளிக்கு சென்று வந்த இந்தியரான சுபான்ஷூ சுக்லா, மூங் டால் அல்வா, கேரட் அல்வா, பிரியாணி என பல்வேறு வகையான உணவுகளை கொண்டு சென்றார்.
முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் மீன் குழம்பு ஆகிய உணவுகளை கொண்டு சென்றார்.
பழங்கள், பச்சை காய்கறிகள், cereal வகை உணவுகள், பால் பவுடர், பீட்சா, பொரித்த கோழி என வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை விண்வெளிக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஆனால், விண்வெளியில் முதலில் சாப்பிடப்பட்ட உணவு என்ன என்பதை பார்க்கலாம்.
முதலில் சாப்பிடப்பட்ட உணவு
12 ஏப்ரல் 1961 ஆம் ஆண்டு சோவியத்தை சேர்ந்த யூரி ககாரின், முதல் மனிதராக விண்வெளிக்கு சென்றார். வோஸ்டாக் 1 விண்கலம் மூலம், அவர் மேற்கொண்ட பயணம் 108 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்த பயணத்தில், அவர் மாட்டிறைச்சி மற்றும் கல்லீரல் ஆகியவற்றை பேஸ்ட் வடிவத்தில் சாப்பிட்டுள்ளார்.
ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில், உணவு துண்டுகள் மிதந்து மூச்சுக்குழாய் உள்ளே சிக்கிக்கொள்ளும் என நினைத்து, பேஸ்ட் வடிவத்தில் தயாரித்து அலுமினிய குழாயில் அடைத்து கொடுத்துள்ளனர். அதை அவர்கள் நேரடியாக வாயில் பிசைந்து கொள்ள வேண்டியிருந்தது.
யூரி ககாரின், 2 அலுமினிய குழாய்களை கொண்டு சென்றார். ஒரு குழாயில், மாட்டிறைச்சி மற்றும் கல்லீரலும், மற்றொன்றில் சாக்லேட் Sauce இருந்துள்ளது.
இந்த உணவு சாதாரமானது சுவையில் எந்த மாறுபாடும் இல்லை என யூரி ககாரின் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |