ரூ.42.3 லட்சத்துக்கு உணவு ஓர்டர் செய்த பெண்! 2023ல் சுவாரசிய தகவல்
2023ம் ஆண்டு குட்பை சொல்லிவிட்டு 2024ம் ஆண்டை வரவேற்க தயாராகிவிட்டோம், இந்த ஆண்டில் நடந்த மறக்கமுடியாத விடயங்கள், மக்களால் அதிகம் தேடப்பட்டது, விரும்பப்பட்டது என பல பட்டியல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான Swiggyயில் இருந்து வெளியிடப்பட்ட தகவல் பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துவிட்டது.
ஆம் மும்பையை சேர்ந்த ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர், 2023ம் ஆண்டில் ரூ.42.3 லட்சத்துக்கு உணவை ஓர்டர் செய்துள்ளாராம்.
Jhansi வசிக்கும் நபர் ஒருவர் ஒரேநாளில் 269 பொருட்களை ஓர்டர் செய்துள்ளார், சொக்லேட் பெங்களூரு மக்கள் விரும்பி சுவைப்பதால் “சொக்லேட் நகரம்” என்ற பெயரையும் பெற்றுள்ளது, 8.5 மில்லியன் கேக்குகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக காதலர் தினத்தன்று மட்டும் நிமிடத்திற்கு 271 கேக்குகள் டெலிவரி செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி கூறுகிறது. இதுமட்டுமல்லாது, துர்கா பூஜையன்று 7.7 மில்லியன் குலாப் ஜாமூன்களும், நவராத்தியன்று அதிகளவு மசாலா தோசையும் ஓர்டர் வந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டில் ஒவ்வொரு நொடிக்கும் 2.5 பிரியாணிக்கள் ஓர்டர் வந்ததும் தெரியவந்துள்ளது, ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் தினமும் 4 பிரியாணி வீதம் மொத்தம் 1633 பிரியாணிக்களை ஓர்டர் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |