இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: கொல்லப்பட்ட இரண்டு Al Jazeera செய்தியாளர்கள்
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு Al Jazeera செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Al Jazeera-வின் செய்தியாளர் இஸ்மாயில் அல் கோல் மற்றும் கேமராமேன் ரமி அல் ரெஃபீ ஆகிய இருவரும் கொல்லப்பட்ட போது ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே(Ismail Haniyeh)-வின் வீட்டிற்கு அருகே செய்தி சேகரிக்க பணியமர்த்தப்பட்டிருந்தனர் என சக ஊழியரான அனஸ் அல் ஷெரீப் கருத்துப்படி தெரியவந்துள்ளது.
அதே சமயம் இருவரும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே-யின் பிறந்த இடமான ஷாதி நகர்புற அகதிகள் முகாமில் செய்தி சேகரித்து கொண்டிருந்ததாக AP செய்தி நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: பொலிஸார் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்த குடியேற்ற எதிர்ப்பாளர்கள்!
இந்நிலையில், செய்தியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் எத்தகைய கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் காரில் சென்று கொண்டு இருந்த போது காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |