அயர்லாந்தில் ஒரு துயரச் சம்பவம்: கொலை வழக்காக மாறிய விபத்து
Two children, man and woman killed in Waterford house fire: அயர்லாந்திலுள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதில், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளார்கள்.
அயர்லாந்திலுள்ள வீடொன்றில் தீப்பற்றிய நிலையில், அது ஒரு விபத்து என முதலில் கருதப்பட்டது.
இந்நிலையில், அது விபத்து அல்ல, வேண்டுமென்றே அந்த வீட்டுக்கு தீவைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் ஒரு துயரச் சம்பவம்
அயர்லாந்திலுள்ள Kilcohan என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றில், இன்று அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்து தீயணைப்பு வீரர்களும் பொலிசாரும் அங்கு விரைந்துள்ளனர்.

அந்த பயங்கர தீவிபத்தில், அந்த வீட்டிற்குள்ளிருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துவிட்டார்கள். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொலை வழக்காக மாறிய விபத்து
இந்நிலையில், அந்த வீட்டுக்கு வேண்டுமென்றே தீவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, விபத்து என்னும் நிலையிலிருந்து, அந்த வழக்கு கொலை வழக்காக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள அந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.