கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் மரணம்.. தடை விதித்த நாடு! குப்பிகளில் இருந்த நச்சுப் பொருள்
ஜப்பானில் மாடர்னா கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
சம்பவம் குறித்து ஜப்பான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாதம் மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்ட சில நாட்களில் 30 வயதுகளில் உள்ள இரண்டு ஆண்கள் உயிரிழிந்தனர்.
வியாழக்கிழமை தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்ட 3 உற்பத்தித் தளங்களில் ஒன்றில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி டோஸை இருவரும் போட்டுள்ளனர்.
இறப்புக்கான காரணம் குறத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில குப்பிகளில் நச்சுப் பொருள் இருப்பதாக உள்நாட்டு விநியோகஸ்தரான Takeda Pharmaceutical-க்கு புகார் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் 863 தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பப்பட்ட 1.63 மில்லியன் மாடர்னா டோஸ்களை பயன்படுத்துவதற்கு ஜப்பான தற்காலிகமாக தடை விதித்தது.
மாடர்னா கொரோனா தடுப்பூசி குப்பிகளில் உலோகத் துகள்கள் இருந்ததாக சுகாதார அமைச்சகத்தின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜப்பான் ஊடகமான NHK தகவல் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியில் பாதுகாப்பு அல்லது செயல்திறன் பிரச்சினைகள் அடையாளம் காணப்படவில்லை என்றும், தற்காலிக தடை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் அரசாங்கம் மற்றும் மாடர்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.