போர் நிறுத்த எல்லைக் கோட்டை தாண்டிய இருவர்: ஹிஸ்புல்லா அமைப்பினரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் படை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் சுட்டுக் கொலை
லெபனான் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாக கூறி இரண்டு ஹிஸ்புல்லா அமைப்பினரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின் படி, சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பேரும் தெற்கு லெபனானில் உள்ள போர் நிறுத்த எல்லைக் கோட்டை தாண்டியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த இரண்டு பேரும் இஸ்ரேலிய வீரர்களை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியதாகவும், அதன் காரணமாகவே தற்காப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் மிகுந்த பாதுகாப்பு விழிப்புணர்வுடன் இருப்பதாக இஸ்ரேலிய தலைமை தளபதி இயல் ஜமீர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தவும் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |