புறப்படுவதற்கு முன் விமானத்தில் ஏற்பட்ட அசாதாரண செயலால் விமானிகள் பலி!
ஈரானில் F-5 ஜெட் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட அசாதாரண செயலால் இரண்டு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நாட்டின் தென்மேற்கு மாகாணமான Khuzestan-ல் உள்ள Dezful விமானப்படை தளத்தில் இச்சம்பவம் நடந்ததாக IRIB ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Dezful விமானப்படை தளத்திலிருந்து இரண்டு இருக்கைகள் கொண்ட F-5 போர் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது.
அப்போது, திடீரென தற்செயலாக விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டதால் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக ஈரானின் ஊடக நிறுவனமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தில் Hossein Nami மற்றும் Kianoush Basti ஆகிய இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து ஈரான் அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சுவிஸில் F-5 விமானம் விபத்துக்குள்ளானது. எனினும், அதில் பயணித்த விமானி வெளியேறும் அமைப்பை செயல்படுத்தி விமானத்திலிருந்து வெளியேறிய பாராசூட் உதவி மூலம் உயிர் தப்பினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.