பிறந்த குழந்தைகள் நிறைந்த அறை., நிலநடுக்கத்தின்போது 2 செவிலியர்களின் துணிச்சல் செயல்!
துருக்கியில் நிலநடுக்கத்தின்போது தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், அரை முழுவதும் இருந்த புதிதாக பிறந்த குழந்தைகளை 2 செவிலியர்கள் பாதுகாத்து நின்ற வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6), துருக்கியும் சிரியாவும் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிலவற்றை எதிரிகொண்டன. இந்தப் பேரழிவில் ஏற்கனவே 35,000-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோனது.
துருக்கியில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், ஒரு தனித்துவமான மனிதாபிமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இரண்டு செவிலியர்கள்
அதில், இரண்டு செவிலியர்கள் நிலநடுக்கைத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்ததைக் காட்டுகிறது.
காசியான்டெப்பில் உள்ள ஒரு மருத்துவமனையின் சிசிடிவி வீடியோ கிளிப்பில், டெவ்லெட் நிஜாம் (Devlet Nizam) மற்றும் கஸ்வால் காலிக்சன் (Gazwal Caliksan) என அடையாளம் காணப்பட்ட இரண்டு செவிலியர்கள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடுவதைக் காட்டுகிறது.
இன்குபேட்டர்களில் குழந்தைகள்
பெரும்பாலான மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வெளியில் ஓடிய அந்தத் தருணத்தில், இந்த இரண்டு செவிலியர்கள் வந்து இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நின்றனர். நிலநடுக்கம் முழுவதும், அறைக்குள் அனைத்தும் அதிர்ந்தபோது, இருவரும் தைரியமாக தங்களைத் தாங்களே பிடித்துக் கொண்டு குழந்தைகளைப் பாதுகாத்தனர்.
Sağlıkçılarımız şahane insanlar?#GaziantepBüyükşehir İnayet Topçuoğlu Hastanemiz yenidoğan yoğun bakım ünitesinde, 7.7'lik #deprem esnasında minik bebekleri korumak için Hemşire Devlet Nizam ve Gazel Çalışkan tarafından gösterilen gayreti anlatacak kelime var mı?
— Fatma Şahin (@FatmaSahin) February 11, 2023
?????? pic.twitter.com/iAtItDlOwb
அவர்களின் துணிச்சலான செயல் தற்போது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
துருக்கியும் சிரியாவும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து வெளிவர வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்யும் வேளையில், பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உயிர் பிழைத்தவர்கள் பலர் தோண்டி எடுக்கப்படும் செய்திகள் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளன.