தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம் - 2 விமானிகள் உயிரிழப்பு
டொமினிகன் குடியரசில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
டொமினிகன் குடியரசில் விமான விபத்து
Gulfstream G200 ரக தனியார் விமானம் ஒன்று, டொமினிகன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை நோக்கி புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானிகள் அவசர நிலையை அறிவித்து விட்டு, மீண்டும் லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளது.
விமானத்தை தரையிறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில்யில் இருந்து விலகி, தரையில் மோதி வெடித்து சிதறியுள்ளது.
விமானத்தின் பின்பகுதி தரையில் உரசிக்கொண்டே செல்லும் போது திடீரென வெடித்து சிதறி தீப்பிழம்பு உருவாகும் காணொளி வெளியாகியுள்ளது.
இந்த விமானத்தில் பயணிகள் யாரும் பயணிக்காத நிலையில், விமானத்தை ஓட்டி சென்ற விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்ததாக டொமினிகன் குடியரசின் தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |