பாராசூட் விபத்தில் எதிரி நாட்டுக்குள் சென்று விழுந்த பிரித்தானிய வீரர்: உதவிக்காக காத்திருந்த திக் திக் நிமிடங்கள்
ஈராக்கில் நடந்த இரவு நேர இரகசிய ஆபரேஷன் ஒன்றின்போது, இரண்டு பாராசூட் வீரர்கள் மோதிக்கொண்டதில் பிரித்தானிய வீரர் ஒருவரும் அமெரிக்க வீரர் ஒருவரும் எதிரியின் எல்லைக்குள் சென்று விழுந்துள்ளார்கள்.
18,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானங்களிலிருந்து பாராசூட்டில் குதித்திருக்கிறார்கள் இரண்டு வீரர்கள்.
அவர்களது பாராசூட்கள் சிக்கிக்கொள்ள, வேகமாக சென்று தரையில் மோதியுள்ளார்கள் அவர்கள்.
ஐ,எஸ் அமைப்பினர் வந்து பிடித்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் திக் திக் என திகிலில் உறைந்து கிடந்துள்ளார்கள் அவர்கள்.
ரேடியோ மூலம் தாங்கள் எதிரியின் எல்லைக்குள் விழுந்துவிட்ட தகவலை தங்கள் சக வீரர்களுக்கு தெரியப்படுத்த, சில நிமிடங்களில் ஏராளமான ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் குவிந்த ஹெலிகொப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கு வட்டமிட்டுள்ளன.
முதுகெலும்பு மற்றும் கால்களில் பலத்த காயத்துடன் கிடந்த அவர்களை மீட்டு, ஜேர்மனியிலுள்ள அமெரிக்க மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார்கள் அவர்களது சக வீரர்கள்.
என்றாலும், எப்போது எங்கிருந்து ஐ.எஸ் அமைப்பினர் வருவார்களோ என்ற பயத்துடன் அந்த வீரர்கள் காத்திருந்த அந்த திக் திக் நிமிடங்களை நினைவு கூர்ந்துள்ளார் அந்த ஆபரேஷனில் பங்கேற்ற ஒருவர்.

