குவைத்தில் 2 இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
2 sri lankan womens mysterious death in kuwait: குவைத்தில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 2 இலங்கைப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குவைத்தில் 2 இலங்கைப் பெண்கள் உயிரிழப்பு
குவைத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

முதல் சம்பவத்தில், அலி சபா அல்-சலேமில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒரு சேமிப்பு அறைக்குள் அப்பெண்ணின் சடலத்தைக் கண்டதாக குவைத் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர், 1988 ஆம் ஆண்டில் பிறந்த இலங்கைப் பெண் என தெரிய வந்துள்ளது.
இரண்டாவது சம்பவத்தில், அல்-நஹ்தா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இறந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக குவைத் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்,1999 ஆம் ஆண்டில் பிறந்த இலங்கைப் பெண் ஆவார்.
இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இருவேறு சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரு நபர்களுக்கும் அல்லது சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்த தகவல்களை குவைத் அதிகாரிகள் வழங்கவில்லை.