ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று பயங்கர துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பிச்நாட் மச்சில் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவம் மற்றும் குப்வாரா போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில்,
பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள ஏவுதளம் ஒன்றிலிருந்து ஊடுருவி வருவதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசாரும், பாதுகாப்புப்படையினரும் அப்பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில், இன்று குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளை தேடுதல் பணி இன்னும் நடந்து வருகிறது என்றார்.
2 terrorists killed in an Encounter near Pichnad Machil area of #Kupwara district.
— RuksanaBegum786 (@RBegum786) May 3, 2023
Misguided youth are just destroying their lives in terrorism, we all know guns have served #Kashmir with only death & destruction. pic.twitter.com/UxyUTi9e2V
Encounter between terrorists and security forces underway in J&K's Kupwara, 2 terrorists killed #Kupwara #KashmirPolice #Encounter #Kupwara pic.twitter.com/qmfqVnvz6A
— The Saviours (@TheSaviours3) May 3, 2023