பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர் பலி!
ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல்
புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் அப்பாவி பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பயங்கரவாத அமைப்புகளை முடக்க முயற்சித்து வருகின்றன. இதற்காக ராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
Image: AFP
திடீர் தாக்குதல்
இந்த நிலையில் தலைநகர் ஓவ்கடோக்கில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உடனே ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.
africanews OLYMPIA DE MAISMONT/AFP or licensors
இதில் 33 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் புர்கினோ பாசோ ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.