12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 15-20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இதையடுத்து 18 மணிநேர போராட்டத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை
கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று (03) மாலை 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து, சிக்கி தவித்து வந்துள்ளது.
15-20 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
Photo: India Today
விசாரணையில் ஈடுப்பட்டிருக்கும் பொலிஸார் கூறுகையில், குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதாகவும் இந்த கிணறு குழந்தையின் தந்தையின் சொந்த காணியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறாகவும் தெரியவந்துள்ளது.
#Karnataka: A 2-year-old boy fell into a borewell in Lachayan village on Wednesday evening. 12 hours later, the rescue operation is still underway.
— NDTV (@ndtv) April 4, 2024
(Visuals from last night's recue operation)
Read more: https://t.co/GPACXLo5nq pic.twitter.com/vIUdlmBANT
நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவை அதிகாரிகள் உள்ளனர்.
வீடியோ மூலம் குழந்தையை பார்த்த போது, குழந்தையின் கால்கள் அசைந்துள்ளன. எனவே குழந்தைக்கு ஓட்சிசன் வழங்குவதற்காக கிணற்றுக்குள் குழாய்கள் செருகப்பட்டுள்ளதாக பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
#WATCH | Operation underway to rescue the 1.5-year-old boy who fell into an open borewell in Lachyan village of #Karnataka
— Hindustan Times (@htTweets) April 4, 2024
? ANI pic.twitter.com/qFskULnoIG
இந்நிலையில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
வீடியோ காட்சியின் மூலம் குழந்தையை கண்காணித்த பொழுது, அக்குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. பின் குழந்தையை மீட்டெடுப்பதற்காக சுமார் 21 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழி அதிகாரிகள் தோண்டியுள்ளனர்.
அருகில் தோண்டி குழியின் ஊடாக மீட்பு படையினர் சென்று குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு மருத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |