அமெரிக்காவில் 2 வயது சிறுமியை கைது செய்த ICE அதிகாரிகள்: வெடிக்கும் போராட்டம்
மினியாபோலிஸில் 2 வயது சிறுமியை ICE அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2 வயது சிறுமியை கைது செய்த பொலிஸார்
கடந்த வியாழக்கிழமை மினியாபோலிஸில் எல்விஸ் ஜோயல் டிபன் எச்செவெரியா மற்றும் அவரது 2 வயது மகள் மகள் சோலி ரெனாட்டா டிபன் வில்லாசிஸ் இருவரையும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மினியாபோலிஸில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் ஏற்பட்ட சமீபத்திய சர்ச்சைக்கு மத்தியில் இந்த விவகாரம் பொரிய போராட்ட களத்தை உருவாக்கியுள்ளது.
உள்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்ட தகவலில், எல்விஸ் ஈக்வடார் நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தடுத்து நிறுத்தப்பட்ட போது வாகனத்தை முறைப்படி ஓட்டாததோடு அதிகாரிகளின் உத்தரவுக்கு பணிய மறுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகள் மறுப்பு
ஆனால் உள்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலை முற்றிலும் மறுத்து மாறுபட்ட கருத்தை மினியாபொலிஸ் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று அவர்களை பின் தொடர்ந்து வந்து வழிமறித்ததோடு, எந்தவொரு பிடிவாரண்ட் இல்லாமல் அவர்களை கடத்தி சென்றதாகவும் மினியாபொலிஸ் நகர சபை உறுப்பினர் ஜேசன் சாவேஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து கைது நடவடிக்கையை அடுத்து கிட்டத்தட்ட 120 போராட்டக்காரர்கள் ICE அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |