கனடாவில் பால் குடித்ததால் 20,000 டொலர் அபராதம்!
கனடாவில் உள்ள நபர் ஒருவர் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பாலை குடித்ததால் அவருக்கு 20,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலை குடித்த நபர்
கனடாவில் பாலை குடித்ததால் 20000 டொலர் அபராதம் விதித்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருக்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மைக்ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவர் இருக்கிறார். அவர், வீடுகளை மற்றவருக்கு காண்பிப்பதை தொழிலாக கொண்டிருந்தார்.
இவர், விற்பனைக்காக வீடு ஒன்றை சிலருக்கு காண்பிப்பதற்காக சென்றிருந்தார். அந்த வேளையில் தான் இது நடந்துள்ளது.
இந்த ரியல் எஸ்டேட் முகவர், வீடு காண்பிப்பதற்கு சென்றிருந்த போது வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குளிர்சாதன பெட்டியில் உள்ள பாலை குடித்ததாக கூறப்படுகிறது. அதாவது, அவர் குளிர்சாதன பெட்டியை திறந்து தண்ணீர் குடிக்க நினைத்துள்ளார்.
ஆனால், குளிசாதன பெட்டியில் தண்ணீர் இல்லாதால் அதிலிருந்த பாலை எடுத்து கொஞ்சம் குதித்துள்ளார். மீதமிருந்த பாலை குளிசாதான பெட்டியின் உள்ளே வைத்துள்ளார்.
20,000 டொலர் அபராதம்
இந்நிலையில், ரியல் எஸ்டேட் முகவர் குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை குடித்தது வீட்டின் உரிமையாளருக்கு சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால், வீட்டின் உரிமையாளர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, மைக்ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவருக்கு 20,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பால் குடித்ததால் அபராதம் விதிக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் கனடாவில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |