உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி; கத்தார் அறிவிப்பு
உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கத்தார் வழங்குவதாக அறிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்காக உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கத்தார் வழங்கவுள்ளது.
கத்தார் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கத்தாரின் வெளியுறவு அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உக்ரைனுக்கு விஜயம் செய்வதாக கத்தார் அறிவித்தது.
Reuters
அதே நேரத்தில், உக்ரேனிய ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, கருங்கடலில் பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார். பயங்கரவாதிகளின் இத்தகைய செயல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச கடல்சார் சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறி ரஷ்ய போர்க்கப்பல்கள் கருங்கடலில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக Telegram-ல் குறிப்பிட்டுள்ளார்.
Reuters
கடந்த வாரம், கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஐ.நா மற்றும் துருக்கியின் தரகு ஒப்பந்தத்தை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வந்தது. உக்ரேனிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் ராணுவ இலக்குகளாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுதத்து.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Qatar to provide Ukraine with 100 million Dollars humanitarian aid, Qatar humanitarian aid Ukraine, Ukraine Russia War, Ukraine