சாலை விபத்தில் 20 பேர் எரிந்து சாம்பலான பயங்கரம்! ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் எரிந்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் பௌசி மாநிலத்தில் Huturu கிராமத்தில் உள்ள பௌசி-கானோ நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்ததை பௌசி மாநிலத்திற்கான மத்திய சாலை பாதுகாப்பு அதிகாரி Yusuf Abdullahi உறுதிப்படுத்தியுள்ளார்.
Yusuf Abdullahi வெளியிட்டுள்ள அறிக்கையில், மினி பேருந்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு வாகனத்தில் மொத்தம் 21 பயணித்துள்ளனர்.
இதில், ஒரு ஓட்டுநர் மட்டும் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார், மற்ற 20 பேரும் வாகனத்துடன் எரிந்து சாம்பலாகிவிட்டனர்.
மகன் புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் துடிக்கும் உக்ரேனிய தாய்! மனதை உருக்கும் புகைப்படங்கள்
11 ஆண்கள், 4 பெண்கள், ஒரு ஆண் குழந்தை மற்றும் 3 பெண் குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேக கட்டுப்பாட்டை மீறியதே இந்த விபத்து ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என கூறிய Yusuf Abdullahi, ஓட்டுநர்கள் வேக கட்டுப்பாட்டை மீறுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஓட்டுநர்கள் தங்கள் உயிரையும், பயணிகளின் உயிரையும் பாதுகாப்பாக வைக்க கவனத்துடன் வாகனம் ஓட்டுமாறு Yusuf Abdullahi அறிவுறுத்தியுள்ளார்.