லெபனானில் பயங்கரம்! எரிபொருள் டேங்கர் வெடித்து 20 பேர் பலி.. 80 பேர் காயம்: திகிலூட்டும் காட்சி
மத்திய கிழக்கு நாடான லெபனானில் எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறியதில் 20 பேர் பலியானதாக அந்நாட்டு செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
வடக்கு லெபனானில் உள்ள அக்கார் மாவட்டத்தில் Tleil பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிபொருள் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்தை தொடர்ந்து சம்பவியடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் சட்ட அமலாக்கத்துறையின் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
லெபனான் தற்போது கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது மற்றும் கடந்த வாரம் டேங்கர்கள் கடத்தப்பட்ட பல சம்பவங்கள் நடந்தது.
அதேசமயம், மருத்துவமனைகளில் எரிபொருள் குறைவாக இருப்பதாகவும், மூட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழலில் எரிபொருள் டேங்கர்கள் வெடித்து விபத்துக்குள்ளானது அந்நாட்டு அரசாங்கத்தை மேலும் கலக்கமடைய வைத்துள்ளது.
ليس هناك ارقام دقيقة لاعداد ضحايا #كارثة_تليل في #عكار ولكن المصادر تشير الى انهم بالعشرات pic.twitter.com/hZVt3IjV2S
— ﮼مـصـدر ﮼مسـؤول (@MMas2ool) August 15, 2021
சமீபத்திய மாதங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையால் லெபனான் பாதிக்கப்பட்டுள்ளது.
⭕️#Lebanon: Video from #Akkar pic.twitter.com/tNFM7P6QDT
— ?-???? (@L_Team10) August 15, 2021
2020 ஆகஸ்ட் மாதம் பெய்டூட் வெடி விபத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க லெபனானுக்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.