7 மாடி கட்டிடத்தில் பற்றிய தீ - கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் உயிரிழப்பு
இந்தோனிசியாவில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனிசியா தீ விபத்து
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில், ஜப்பானை தளமாகக் கொண்ட டெர்ரா ட்ரோன் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான டெர்ரா ட்ரோன் இயங்கி வந்தது.

இந்த நிறுவனம் சுரங்கம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு ட்ரோன் சேவைகளை வழங்குகிறது.
இந்த கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் பற்றிய தீ, மேலுள்ள மற்ற தளங்களுக்கும் பரவ தொடங்கியது.
தீ பிழம்புகள் அதிகரித்து கரும் புகை பரவ தொடங்கியதால், ஊழியர்கள் மற்றும் அருகே உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர்.

ஏராளமான தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தினர். மேலும் உள்ள சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில், தற்போது வரை ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 15 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் சுசத்யோ பூர்னோமோ காண்ட்ரோ தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |