புடினை மோசமாக சித்தரித்து பச்சை குத்திய மாணவி! ரஷ்யாவுக்கு எதிராக விமர்சனம்..10 ஆண்டுகள் சிறை தண்டனை வாய்ப்பு
ரஷ்யாவில் மாணவி ஒருவர் உக்ரைன் போர் குறித்து விமர்சித்து பதிவிட்டதால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 வயது மாணவி
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. எனினும் ரஷ்யாவில் உள்ள ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே போரை எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்யா மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் போர் குறித்து விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவியான ஒலேஸ்யா, ரஷ்யாவுக்கு எதிராகவும் அவரது நண்பர்கள் போரை விமர்சிக்கும் பதிவுகளையும் பகிர்ந்தார். இதன் காரணமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர், Electronic Tag மூலம் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
சிறை தண்டனை வாய்ப்பு
பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும், ரஷ்ய ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாகவும் ஒலேஸ்யா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவார் என்று கூறப்படுகிறது.
அவரது கையில் புடினை சிலந்தி போல் சித்தரித்து பச்சை குத்தியிருந்தார். ஒலெஸ்யாவின் இடுகையில், ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து அவரது நண்பர் வருத்தப்பட்டதை குறிப்பிட்டிருந்தார். மேலும், பாலத்தைப் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாக அவரே ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையில் அவர் வீட்டுக் காவலில் இருப்பதால் தொலைபேசியில் பேசவும், ஒன்லைன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.