2,00,000 குழந்தைகளை ரஷ்யா வலுகட்டாயமாக....உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 2,00,000 குழந்தைகள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் பொதுமக்களும் கொடூரமான முறையில் இதுவரை கொல்லப்பட்டும் நாடுகடத்தப்பட்டும் உள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேற்று இரவு வழங்கிய உரையில் பேசிய போது, கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய போர் நடவடிக்கையில் இருந்து இதுவரை 2,00,000 குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் பல்வேறு நாடுகளுக்கு துரத்தப்பட்டுள்ளனர், இவ்வாறு வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட அல்லது வெளிநாடுகளுக்கு துரத்தப்பட்ட குழந்தைகளில் அனாதை இல்லங்களில் இருந்த குழந்தைகள், பெற்றோருடன் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிந்த குழந்தைகள் இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றவியல் கொள்கையின் நோக்கம் மக்களைத் திருடுவது மட்டுமல்ல, நாடு கடத்தப்பட்டவர்களை உக்ரைனை மறக்கடித்து நிரந்தரமாக சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் செய்வதே ஆகும் என்று Zelenskyy சர்வதேச குழந்தைகள் தினமான புதன்கிழமையன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரவு வீடியோ உரையில் கூறினார்.
அத்துடன் போரில் இதுவரை 243 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் 446 பேர் காயமடைந்துள்ளனர், 139 பேர் காணாமல் போகியுள்ளனர் என்று கூறிய ஜெலென்ஸ்கி ரஷ்ய துருப்புகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தரவுகள் இன்னமும் தெளிவாக இல்லாததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய ராணியாரின் மொத்த சொத்துமதிப்பு இதுதான்... வெளியான தகவல்
உக்ரைன் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும், ஆனால் முதலில் அது ரஷ்யாவிற்கு போர்க்களத்தில் உக்ரைனைக் கைப்பற்ற முடியாது, , எங்கள் குழந்தைகள் ஆக்கிரமிப்பாளர்களின் சொத்தாக மாற மாட்டார்கள் என்று ஜெலென்ஸ்கி தனது உரையில் தெரிவித்தார்.