உலகின் சக்திவாய்ந்த இராணுவம் 2024: நான்காம் இடத்தில் இந்தியா., இலங்கையின் நிலை என்ன?
உலகின் நான்காவது சக்திவாய்ந்த ராணுவத்தை இந்தியா கொண்டுள்ளது.
அதேபோல் உலகின் சக்திவாய்ந்த இராணுவத்தின் பட்டியலில் இலங்கை இராணுவம் 75 வது இடத்தில் உள்ளது.
Global Firepower எனும் இராணுவம் தொடர்பான தரவுகளை பராமரிக்கும் இணையதளம் இந்த Military Strength Rankings 2024 எனும் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இராணுவ துருப்புக்களின் எண்ணிக்கை, இராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் போன்ற 60 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு, உலகின் 145 நாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் குளோபல் ஃபயர்பவரின் தரவரிசை அமைந்துள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா..
இந்தப் பட்டியலில் அமெரிக்கா மிகவும் சக்திவாய்ந்த நாடாக முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலின்படி, உலகின் நான்காவது சக்திவாய்ந்த ராணுவத்தை இந்தியா கொண்டுள்ளது.
தென் கொரியா ஐந்தாவது இடத்திலும், பிரித்தானியா ஆறாவது இடத்திலும் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் ஜப்பான் மற்றும் துருக்கி உள்ளன.
இப்பட்டியலில், உலகின் 9வது சக்திவாய்ந்த ராணுவத்தை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
இந்தியாவில் 25.27 லட்சம் துணை ராணுவ வீரர்கள் உள்ளனர்
பாகிஸ்தானை விட இந்தியா மூன்று மடங்கு அதிக துணை ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் துணை ராணுவப் படையில் 25,27,000 வீரர்கள் உள்ளனர்.
இந்தியாவில் 4,641 டாங்கிகள் மற்றும் 606 போர் விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 3,742 டாங்கிகள் மற்றும் 387 போர் விமானங்கள் உள்ளன.
கடற்படைத் திறனில், பாகிஸ்தான் இந்தியாவை பின்தங்கியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானிடம் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன, இந்தியாவிடம் 40 மட்டுமே உள்ளது.
Global FirePower பட்டியலின்படி, மிகக் குறைந்த ராணுவத் திறன் கொண்ட நாடாக பூடான் 145வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் ஆற்றல் குறியீடு 0.0699 ஆகும். அதேசமயம் இந்தியாவின் ஆற்றல் குறியீடு 0.1023. தரவுகளின்படி, பாகிஸ்தானின் ஆற்றல் குறியீடு 0.1711 ஆகும்.
குளோபல் ஃபயர் பவரின் கூற்றுப்படி, பூட்டானின் இராணுவம் உலகின் பலவீனமான இராணுவமாகும். பூட்டானின் ஆற்றல் குறியீடு 6.3704 ஆகும்.
சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2024 Military Strength Ranking, Global Firepower's Military Strength Rankings 2024, Global Firepower Ranking, Indian Army, United Kingdom, Sri Lankan Army