உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்! ஒரே நாட்டில் மட்டும் 7 இடங்கள்
ஒரு லட்சம் மக்களில் கொல்லப்படுவதன் விகிதத்தின்படி 2024யின் மிகவும் ஆபத்தான 10 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவற்றில் மெக்சிகோ நாட்டில் மட்டும் 7 நகரங்கள் ஆபத்தான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் எல்லாம் துரதிர்ஷ்டவசமாக போர் பிரச்சனைகள் அல்லது சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற பெரிய அளவிலான உள் மோதல்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
கொலிமா (மெக்சிகோ)
கொலிமா நகரமானது 100,000 குடிமக்களுக்கு 140.32 என்ற கொலை விகிதத்துடன், உலகின் மிக ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
வன்முறை கும்பல்கள் இங்கு போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை செய்கின்றன.
Ciudad Obregon (மெக்சிகோ)
117.83 என்ற கொலை விகிதத்துடன் 2024யில் உலகின் இரண்டாவது ஆபத்தான நகரமாக Ciudad Obregon வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கும் போதைப்பொருள் பரவல், கொலைகள், கடத்தல்கள் மற்றும் வன்முறைகள் போன்ற குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
Port-au-Prince (ஹைதி)
117.24 என்ற கொலை விகிதத்துடன் ஹைதி நாட்டின் தலைநகரான Port-au-Prince மூன்றாவது இடத்தில் உள்ளது.
வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் சமீபத்திய ஆண்டுகளில் இங்கு நிலைமை மோசமாகியுள்ளது.
மேலும் அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இயற்கை பேரழிவுகளின் பின்விளைவுகளால் இங்கு மக்கள் பலர் ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர்.
ஜமோரா (மெக்சிகோ)
இந்நகரம் உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஒரு லட்சம் குடிமக்களுக்கு 105.13 என்ற கொலை விகிதத்தை கொண்டிருப்பதால்தான்.
ஏனெனில், இங்கு கடத்தல்கள் மற்றும் பிற வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் விற்பனை தொடர்பான போட்டிதான் பெரும்பாலும் வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது.
மன்சானிலோ (மெக்சிகோ)
பசிபிக் கடற்கரையில் உள்ள பரபரப்பான துறைமுக நகரமான மன்சானிலோவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் இங்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்றவையாகும்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு இடையே சண்டை நடப்பதனால், இந்நகரம் 102.58 என்ற விகிதத்தைக் கண்டது.
டிஜுவானா (மெக்சிகோ)
அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள பிரபலமற்ற மோசமான நகரமாக உள்ளது டிஜுவானா. இங்கு பெரும்பாலும் செயற்கை போதைப்பொருள் கடத்தல், கும்பல் தொடர்பான நடவடிக்கைகளின் காரணமாக 91.76 கொலை விகிதத்தை டிஜுவானா பெற்றுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கும் இடையே இங்கு அடிக்கடி சண்டைகள் நடக்கின்றன.
Zacatecas (மெக்சிகோ)
மெக்சிகோவின் Zacatecas நகரமானது உலகின் 7வது இடத்தில் உள்ளது. வளமான வரலாற்றையும், காலனித்துவ கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றிருந்த இந்நகரம், தற்போது கொலைகள் மற்றும் கடத்தல்கள் என பல குற்றங்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.
இங்கு கும்பல்களுக்கு இடையேயான கடுமையான போட்டி அதிகாரிகளுக்கு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது.
குவாயாகில் (ஈக்வடார்)
குற்ற விகிதங்கள் மற்றும் வன்முறை காரணமாக ஈக்வடாரின் மிகப்பெரிய நகரமான குவாயாகில், உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
இங்கு வறுமை, குற்றத்தின் சிக்கலான தொடர்பு ஆகியவை சட்ட அமலாக்கத்திற்கு குற்றங்களை தடுக்க சவாலாக உள்ளது.
மண்டேலா பே (தென் ஆப்பிரிக்கா)
தென் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரம் நாட்டிலேயே அதிக கொலை விகிதங்களை அனுபவித்துள்ளது.
இங்கு ஆயுதமேந்திய கொள்ளை போன்ற குற்றங்கள் பெரும்பாலும் வேலையின்மை மற்றும் வறுமை போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளால் தூண்டப்படுகின்றன.
சியுடாட் ஜுவரெல் (மெக்சிகோ)
உலகின் மிக ஆபத்தான நகரங்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது மெக்சிகோவின் சியுடாட் ஜுவரெல் (Ciudad Juarez).
நீண்ட காலமாக வன்முறைக்கு பெயர் பெற்ற இந்நகரம் போதைப்பொருள் கும்பல்களால் வன்முறைக்கு உள்ளாகிறது.
உள்ளூர் அதிகாரிகளும், மெக்சிகோ அரசாங்கமும் வன்முறையைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் சவால்கள் கணிசமானதாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |