6.2 வினாடிகளில் 0-100km வேகம்., புதிய 2025 BMW 3 Series LWB அறிமுகம்!
BMW Motorrad India நிறுவனம் BMW 3 Series Long Wheelbase காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இது இந்தியாவில் ஜேர்மன் நிறுவனத்தின் இரண்டாவது right-hand drive நீண்ட வீல்பேஸ் பிரீமியம் செடான் ஆகும்.
முன்னதாக, நிறுவனம் eighth-generation BMW 5 Series LWB கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
புதிய BMW 3 Series LWB கார் 330Li M Sport வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
இதன் விலை இந்தியாவில் ரூ.62.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது Chennai BMW தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். இந்த மாடல் பெட்ரோல் பவர்டிரெய்னில் மட்டுமே கிடைக்கும், அதன் டீசல் வகை ஆண்டின் பிற்பகுதியில் வரக்கூடும்.
இது Audi A6, Volvo S90 மற்றும் new-gen Mercedes-Benz E-Class போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை நிறுவனம் காரில் வழங்கியுள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BMW 3 Series Long Wheelbase, 2025 BMW 3 Series LWB