2025 IPL மெகா ஏலம்: முதல் நாளில் CSK எடுத்த வீரர்கள் யார்? செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின் ஆகிய முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்து மிரட்டியுள்ளது.
2025 IPL மெகா ஏலம்
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், முதல் நாளான இன்று ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் பலர் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து நட்சத்திர வீரர்களை தனது வசமாக்கி CSK ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளியுள்ளது.
CSK தக்க வைத்த வீரர்கள்
சென்னை அணி ஏலத்திற்கு முன்பாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவிந்தர ஜடேஜாவை தலா ரூ.18 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
இதையடுத்து கடந்த சீசனில் வேகப்பந்தில் மிரட்டிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பத்திரானா-வை ரூ.13 கோடிக்கும், சிக்சர் துபே என்று அழைக்கப்படும் சிவம் துபே ரூ.12 கோடிக்கும் சென்னை அணி தக்க வைத்தது.
இவர்களுடன் புதிய Uncapped வீரர் விதியின் படி, எம்.எஸ் தோனியை ரூ.4 க்கு சென்னை அணி தக்க வைத்தது.
வீரர்களை தட்டித் தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்நிலையில் ஜெட்டா-வில் இன்று நடைபெற்ற முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி, கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், கலீல் அகமது, ராகுல் திரிபாதி, நூர் அகமது போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் சரியான விலைக்கு எடுத்து மிரட்டியுள்ளது.
CSK-வில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே-வை ரூ. 6.25 கோடிக்கு எடுத்து தனது ஏல கணக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியது.
இதனை தொடர்ந்து RTM Card முறையை பயன்படுத்தி ரச்சின் ரவீந்திரா-வை 4 கோடிக்கும், சிஎஸ்கே-வின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் (9.75 கோடி), ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (10 கோடி), இந்திய நட்சத்திரம் ராகுல் திரிபாதி (3.40 கோடி), இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது (4.80 கோடி), இவர்களுடன் தமிழக வீரர் விஜய் சங்கரை (1.20 கோடி) என சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் நாள் ஏல கணக்கை முடித்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட 5 வீரர்கள் மற்றும் ஏலத்தில் எடுக்கப்பட்ட 7 வீரர்களுடன் சேர்த்து முதல் நாள் முடிவில் சென்னை 12 வீரர்கள் கொண்ட படையை உருவாக்கியுள்ளது.
இரண்டாம் நாள் ஏலத்திற்கு சென்னை அணியிடம் இன்னும் ரூ.15.60 கோடி மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நாளை நடைபெற உள்ள 2ம் நாள் ஏலத்தில் சென்னை அணி மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர், நடுப்பகுதியில் அதிரடியாக விளையாட கூடிய வீரர் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |