2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு - என்ன கண்டுபிடிப்பு?
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு 1908 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2025 இயற்பியலுக்கான நோபல் பரிசு
2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க்(John Clarke), மைக்கேல் எச். டெவோரெட்(Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்டினிஸ்(John M. Martinis) ஆகிய மூவரும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 7, 2025
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2025 #NobelPrize in Physics to John Clarke, Michel H. Devoret and John M. Martinis “for the discovery of macroscopic quantum mechanical tunnelling and energy quantisation in an electric circuit.” pic.twitter.com/XkDUKWbHpz
மின்சார சுற்றுகளில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி, இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.10.41 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஜே.ஹாஃப் ஃபீல்டு(John J. Hopfield) மற்றும் கனடாவை சேர்ந்த ஜெஃப்ரி இ. ஹிண்டன்(Geoffrey E. Hinton) ஆகிய இருவருக்கும், செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |