2025-ல் பிரித்தானிய விசா விதிமுறைகளில் வரும் முக்கிய மாற்றங்கள்
2025ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் (UK) விசா விதிமுறைகளில் பொருளாதார நிதிநிலைமைகள் மற்றும் விசா கட்டணங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், வேலை தேடுபவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன.
முக்கிய மாற்றங்கள்:
1. வாழ்க்கை செலவுத் தொகை:
- லண்டனில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, குறைந்தபட்ச மாதந்திர வாழ்க்கை செலவுத் தொகை (minimum living expense requirement) £1,334ல் இருந்து £1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- லண்டனுக்கு வெளியே படிக்கும் மாணவர்களுக்கான வாழ்க்கை செலவுத் தொகை £1,023ல் இருந்து £1,100 ஆக உயர்ந்துள்ளது.
- மாணவர்கள் முதல் 9 மாதங்களுக்கு தேவையான தொகையையும் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
2. விசா கட்டணங்கள்:
- ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசா கட்டணம் 115 பவுண்டுகளில் இருந்து 120 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
- மாணவர் விசா கட்டணம் 490 பவுண்டுகளில் இருந்து 510 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
- இரண்டு களுக்கு செல்லுபடியாகும் நீண்டகால சுற்றுலா விசா கட்டணம் 400 பவுண்டுகளில் 420 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
3. வேலை மற்றும் குடும்ப விசாக்கள்:
- Skilled Worker Visa விண்ணப்பதாரர்கள் 1,270 பவுண்டு தொகையை ஆதாரமாக காட்ட வேண்டும், இல்லையெனில் அவர்களின் employer இதை உறுதிப்படுத்த வேண்டும்.
- குடும்ப விசாவில் (family visa), கணவன் அல்லது மனைவி விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு குறைந்தது £29,000 வருமானம் கொண்டிருக்க வேண்டும்.
- முதல் குழந்தைக்கு £3,800 மற்றும் ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் £2,400 சேர்க்க வேண்டும்.
4. வாழ்க்கைத் தேவைகளை நிரூபிக்கும் பணி:
- விண்ணப்பதாரர்கள் தங்கள் மூலதன சேமிப்புகளையும் நிதி ஆதாரமாக காண்பிக்க முடியும்.
விண்ணப்பதாரருக்கு ஒரு பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குழந்தை இருந்தால் அல்லது அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது அவர்களின் மனித உரிமைகளை மீறுவதாக இருந்தால், அவர்கள் வருமான அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும் அவர்கள் விசாவிற்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
இதனிடையே, பிரித்தானிய அரசாங்கம் அதன் பருவகால தொழிலாளர் விசா திட்டத்தை 2029 வரை கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. விவசாயத் துறையில் பருவகால தொழிலாளர்களுக்கு 43,000 விசாக்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Changes in UK Visa in 2025, UK Visa Changes from 2025