2026-ல் பூமிக்கு வரும் வேற்றுக்கிரகவாசிகள்! பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் சொல்வது என்ன?
எதிர்வரும் 2026 ம் ஆண்டு பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் தோன்றுவார்கள் என பாபா வங்கா கணித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்தும் மர்ம பொருள்
கடந்த சில மாதங்களாக உலக விஞ்ஞானிகள் 3I/ATLAS என்ற மர்மமான விண்வெளி பொருள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த 3I/ATLAS, விஞ்ஞானிகள் ஊகித்த எந்தவொரு விஷயத்துடனும் ஒத்துப்போகாத நிலையில், இது அனைத்து வகைப்பாட்டையும் மீறியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியற்பியலாளர், இது இயற்கையான விண்வெளி பொருள் இல்லை என்றும், இது வேற்றுக்கிரகவாசிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான விண்கலமாக இருக்கலாம் என்று ஊகங்களை வெளியிட்டுள்ளார்.
33 பில்லியன் டன் எடையுடன், மன்ஹாட்டன் நகரின் அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்த 3I/ATLAS டிசம்பர் 19ம் திகதி பூமிக்கு அருகில் வரும் என்று நாசா அறிவித்துள்ளது.
அதே சமயம் இது பூமியில் இருந்து சுமார் 240 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்பதால் பூமிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாபா வங்காவின் கணிப்பு
இந்நிலையில் புகழ்பெற்ற பல்கேரியா ஞானியான பாபா வங்கா அவர்களின் 2026 ஆண்டிற்கான கணிப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பொருளாதார குழப்பம், உள்நாட்டு கலவரம், தங்கம் விலை உயர்வு, பண நெருக்கடி ஆகியவை குறிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மிக முக்கியமானதாக வேற்றுக்கிரகவாசிகள் தோன்றுவார்கள் என்ற கணிப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  |