2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: வெளியான இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் போட்டி அட்டவணை
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் உலகக் கோப்பை கால்பந்து தொடரானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் வைத்து நடைபெற உள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவுகளுக்கான போட்டி அட்டவணைகள் வெளியாகியுள்ளன.
இதில் அணிகளின் விவரங்கள், திகதி மற்றும் மைதானத்தின் விவரங்கள் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் குரூப் L அட்டவணை
குரூப் L பிரிவில் இடம்பெற்றுள்ள கரேத் சவுத்கேட்டின இங்கிலாந்து கால்பந்து அணி, தனது முதல் போட்டியை அமெரிக்காவில் விளையாடுகிறது.
ஜூன் 17 திகதி டல்லாஸ் மைதானத்தில் குரோஷியாவுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. (நேரம்: மாலை 4:00 EST/ இரவு 9:00 BST)

ஜூன் 23 திகதி பாஸ்டன் மைதானத்தில் கானாவுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. (நேரம்: மாலை 4:00 EST/ இரவு 10:00 BST)
ஜூன் 27 திகதி, நியூ ஜெர்சி மெட்லைஃப் மைதானத்தில் பனாமாவுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. (நேரம்: மாலை 5:00 EST/ இரவு 9:00 BST)
ஸ்காட்லாந்து அணியின் குரூப் C அட்டவணை
குரூப் C பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து கால்பந்து அணி, தனது முதல் போட்டியை அமெரிக்காவில் விளையாடுகிறது.
ஜூன் 13 திகதி பாஸ்டன் மைதானத்தில் ஹைதியுடன் ஸ்காட்லாந்து அணி மோதுகிறது. (நேரம்: மாலை 9:00 EST/ அதிகாலை 2:00 BST)

ஜூன் 19 திகதி பாஸ்டன் மைதானத்தில் மொராக்கோ அணியுடன் ஸ்காட்லாந்து அணி மோதுகிறது. (நேரம்: மாலை 6:00 EST/ இரவு 11:00 BST)
ஜூன் 24 திகதி மியாமி மைதானத்தில் பிரேசில் அணியுடன் ஸ்காட்லாந்து அணி மோதுகிறது. (நேரம்: மாலை 6:00 EST/ இரவு 11:00 BST)
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |