இரவில் உக்ரைன் ஏவிய 77 ஆளில்லா ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய ரஷ்ய படையினர்
இரவு நேரத்தில் நடத்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, இரவு நேரத்தில் நடத்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் பலமான வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ரஷ்ய பிராந்தியங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மொத்தம் 77 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான தகவலின் அடிப்படையில், சராடோவ் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 42 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
அதைப்போல ரோஸ்டோவ் பிராந்தியத்தில் 12 ட்ரோன்களும், கிரிமியன் தீபகற்பத்தில் 10 ட்ரோன்களும், வோல்கோரோட் பிராந்தியத்தில் 9 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
மேலும், பெல்கோரோட், ஆஸ்ட்ரகான், செச்சினியா குடியரசு ஆகிய பிரதேசங்களும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு குறி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |