திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 203 பேர் பலி!
காங்கோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 203 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சமீபத்திய நாட்களில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவும் உண்டாகியுள்ளது.
அந்நாட்டின் எல்லையான ருவாண்டாவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் இந்த வார தொடக்கத்தில் 129 பேர் உயிரிழந்தனர். இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது.
Image: AP Photo/Moses Sawasawa
வியாழன் அன்று கிவு ஏரியின் கரைக்கு அருகில் உள்ள கலேஹே பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் ஆறுகள் கரையை உடைத்தன.
உயர்ந்த பலி எண்ணிக்கை
இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலேஹேவின் நிர்வாகி தாமஸ் பேகெங்கே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'இதுவரை 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன' என தெரிவித்துள்ளார். நியாமுகுபி கிராமத்தில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் இடிபாடுகள், சேற்றில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Image: AP Photo/Moses Sawasawa
Image: AP Photo/Moses Sawasawa
Image: AP Photo/Moses Sawasawa