தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன்
இளைஞர் ஒருவர், தனது தாய்க்கு செலுத்தும் அஞ்சலியாக உடல் எடையை 160 கிலோவில் இருந்து 75 கிலோவாக குறைத்துள்ளார்.
தாயாரின் இறுதிச்சடங்க்கு அனுமதி மறுப்பு
22 வயதான சோபிக் சாஹு(Sobhik sahu) என்ற இளைஞர் கடுமையான உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தார்.

170 கிலோ எடையுடன், உயர் இரத்த அழுத்தம், டைப் 1 நீரிழிவு நோய், ஆஸ்துமா, மூட்டுவலி போன்ற பல்வேறு உடல்நலக்குறைபாடுகளுடன் போராடியுள்ளார்.
இந்நிலையில், அவரது தாய் உயிரிழந்த போது, அவரது உடல் பருமன் காரணமாக, PPE உடை மிக சிறியதாகவும், மிக இறுக்கமாகவும் இருந்ததால், அவரது இறுதிச் சடங்கை செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால், 2 PPT உடைகளை அணிந்து அவருடைய தாயாரின் இறுதிச்சடங்கை மேற்கொண்டுள்ளார். அந்த தருணம் அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது.
என்னை நம்பிய என் தாய்க்காகவும், எனக்காகவும் இனி இது போன்று வாழ மாட்டேன் என உறுதி எடுத்துள்ளார்.
85 கிலோ எடை குறைத்த மகன்
அதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து, உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி தனது உடல் எடையை 75 கிலோவாக குறைத்துள்ளார்.
வீடியோவை காண : https://www.instagram.com/reel/DRtRAy6kx-e
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த மாற்றம் வெறும் பயணம் அல்ல, என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்திற்கும், அவர் எனக்குக் கொடுத்த வளர்ப்பிற்குமான அஞ்சலி. நான் ஆரோக்கியமாக இருப்பதைப் பார்ப்பது அவளுடைய கடைசி ஆசைகளில் ஒன்றாகும்.
இன்று நான் 85 கிலோ எடையைக் குறைத்துள்ளேன், 160 கிலோவிலிருந்து என் பயணத்தைத் தொடங்கி 75 கிலோ உடல் எடையில் இந்த தயாரிப்பை முடித்துள்ளேன். எனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளேன்.

இப்போது என் தாய் என்னை பார்த்து கொண்டிருந்தால் அவருடைய மகன் ஒரு நாளுக்கு பலமுறை ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க தேவை இல்லை. ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் பல வகையான மருந்துகளை பயன்படுத்த தேவை இல்லை என கூற விரும்புகிறேன்.
என் வாழ்க்கையில் எனக்கு உள்ள ஒரே வருத்தம் என்னவென்றால், என் மாற்றத்தை பார்க்க தற்போது என் தாய் என்னுடன் இல்லை. நான் அவர்களை பெருமை படுத்த விரும்புகிறேன்.
இந்த நிலை இறுதி அல்ல, இது ஒரு போராளியை வளர்த்த தாய்க்கு எனது அஞ்சலி. இது எடை இழப்பு அல்ல. இது ஒரு மறுபிறப்பு." என தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் அவரின் எடை குறைப்பு முயற்சியை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |