லொட்டரியில் 225 கோடி வென்றும் நிம்மதி இழந்த டிரக் சாரதி! ஆலோசகர் என்ற பெயரில் ஏமாற்றிய பெண்
நியூஸிலாந்தில் லொட்டரியில் ரூ. 225 கோடி பணத்தை வென்ற பிறகும் தனது வாழ்வில் நிம்மதியை தொலைத்துவிட்டதாக ஒருவர் கூறியுள்ளார்.
உதவி என்ற பெயரில் மோசடிகாரர்களிடம் சிக்கி, தனது பரிசுத்தொகையில் பாதியை இழந்துவிட்டதாக கூறுகிறார்.
நியூஸிலாந்தில், 19 மில்லியன் டொலர் ($NZ), இலங்கை பண மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.225 கோடிகள் வென்ற டிரக் சாரதி ஒருவர், அப்படி ஒரு விடயம் நடந்திருக்கவே கூடாது என நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
மார்க் லிப்ஷாம், 2017-ஆம் ஆண்டு ஆக்லாந்தின் வடக்கே உள்ள வார்க்வொர்த் நகரில் டிரக் டிரைவராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
தனது 53-வது பிறந்தநாளில் மெழுகுவர்த்தியை ஓதும்போது தனக்கு லொட்டரியை பரிசு விழவேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ளார்.
அச்சமயத்தில் தனது கனவில் தோன்றிய எண்ணில் லாட்டரி சீட்டுக்களை வாங்கினார். வேண்டியது நிறைவேறியது, அதிர்ஷ்டவசமாக அவரது சீட்டுக்கு $NZ19,166,667.66 பரிசு விழுந்தது.
வாழ்க்கையே மாறியது என்று நினைத்தார். லிப்ஷாமின் வங்கிக் கணக்கில் பரிசுப் பணம் வந்து சேருவதற்குள், செய்தி பரவியது. மக்கள் கடன் கேட்டு அவரது வீட்டுக்கு வெளியே வந்து நிற்க தொடங்கினர்.
நியூசிலாந்தைச் சுற்றிலும் தொடர்ந்து அழைப்புகள் வந்தன. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருக்கும் உதவி செய்ததாக கூறினார்.
"எப்பொழுதும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அதுதான் எனக்கு கடினமாக இருந்தது. அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியாததால் அது எனக்கு கடினமாக இருந்தது” என்றார்.
அக்டோபர் 2019 வாக்கில், லிப்ஷாமுக்கு வங்கியில் இன்னும் செல்வம் இருந்தது, மேலும் அவரது வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தநிலையில், பக்கத்து வீட்டுக்காரர் வந்து, பணத்தைப் பற்றி நன்றாக தெரிந்தவர் என்று கிம் ஹெல்ம்ப்ரைட் என்ற பெண்ணை லிப்ஷாமுக்கு உதவி செய்ய பரிந்துரைத்துள்ளார்.
ஹெல்ப்ரைட் பின்னர் லிப்ஷாமின் நிதி மற்றும் சட்ட விவகாரங்களை எடுத்துக் கொண்டார், அதே நேரத்தில் உடல்நலம் மற்றும் வாழ்க்கை ஆலோசனைகளை வழங்கினார்.
மதுவைத் தவிர்க்கும்படி அவள் அவனை ஊக்குவித்து, அவனது சொந்தச் சொத்தை வாங்க வார்வொர்த்தில் உள்ள அவரது வாடகை வீட்டிலிருந்து இடம் பெயர்ந்தார்.
அவரது உடல்நிலை, உறவுகள், சட்ட விவகாரங்கள் மற்றும் நிதி ஆகியவற்றில் பயிற்சி அளிக்க லிப்ஷாம் அவர்கள் இருவருக்கு கிட்டத்தட்ட 60,000 பவுண்டுகள் கொடுத்தார். அவர்கள் கேட்கும்போது பணத்தை கொடுக்குமாறு பக்கத்துவீட்டுக்காரர் கூறியுள்ளார். மேலும் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.
2019 டிசம்பரில், நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்க முடிவு செய்த லிப்ஷாம் ஆலோசகரிடம் 1.5 மில்லியன் பவுண்டுகள் கொடுத்ததாகக் கூறினார்.
அதற்கு பிறகு ஆலோசகர் பின்னர் லிப்ஷாமிடம் பேச மறுத்துவிட்டார். அதற்குள் அவருடைய வங்கி இருப்பு 6.2 மில்லியன் பவுண்டுகளாகக் குறைந்தது.
அவர் ஏமாற்றப்படுவது தெரிந்ததும், தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தருமாறு ஆலோசகர் மீது லிப்ஷாம் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், வழக்கு அவருக்கு சாதகமாக திரும்பவில்லை. அவர் உண்மையில் சிக்கிக்கொண்டார். அதற்கும் சேர்த்து நிறைய பணம் செலவழித்தார் என்று கூறினார்.
இறுதியில், அவர் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டது மட்டும் தெரியவந்தது. இந்த பிரச்சினை எப்படி முடிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
வெற்றிபெற்ற பணத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் இழந்துவிட்ட நிலையில், இப்போது ஒரு நல்ல ஐடத்தில் வசிப்பதாகவும், அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கும், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கும் தயாராகி வருகிறார்.