14 வயது எனக்கூறி பதின்ம வயது சிறுவர்களுடன் உறவுகொண்ட இளம்பெண்! அதிர வைத்த குற்றச்சாட்டுகள்
அமெரிக்காவில் சிறுவர்களிடம் வயதை மறைத்து உறவுகொண்ட இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவர்களுடன் உறவு
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் சிறுவன் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அலைசாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சிகர விடயங்கள் தெரிய வந்தது.
அலைசாவின் கைதுக்கு பின் மேலும் 4 சிறுவர்கள் அவரால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். பல மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய அலைசா, தன்னை 14 வயது சிறுமி என கூறி பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
எண்ணற்ற முறை ஒரு சிறுவனிடம் உறவுகொண்டு அலைசா, சிறுவர்களை கவர்ந்திழுத்தது மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது என 11 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
அதேபோல் சிறுவர் Porn படம் வைத்திருத்தல் போன்ற இன்னும் சில குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன. இந்த வழக்கில் முதல் முறையாக அலைசா ஜிங்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் மாணவர் ஒருவருடன் 30 முறை உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அலைசா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |