ஒரே நாளில் பறிபோன 24 உயிர்கள்: மருத்துவமனை கூறும் காரணம் என்ன?
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கர் ராவ் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் உயிரிழந்தவர்கள்
அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 இறப்புகளில், 12 பேர் பெரியவர்களும் 12 பேர் பிறந்த குழந்தைகள் என்றும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் போதியளவிலான வைத்தியர்கள் இல்லாத காரணத்தினாலும், மருந்து பற்றாக்குறையாலும் இந்த இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மருத்துவமனை அதிகாரிகள் கூறிய காரணம்,
''கடந்த 24 மணி நேரத்தில் ஆறு ஆண் குழந்தைகளும், ஆறு பெண் குழந்தைகளும் இறந்துள்ளன. இது தவிர மேலும் 12 நோயாளிகள் பாம்பு கடி உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
பல ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறோம். இந்த பகுதியில் ஒரு மருத்துவமனை தான் இருகின்றது. எனவே நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர். நாங்கள் ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மருந்து வாங்க திட்டமிட்டோம். ஆனால் அதுவும் முடியாமல் போனதால் உள்ளூரில் மருந்து வாங்கி பயன்படுத்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் அம்மாநில அமைச்சர் ஹாசன் முஸ்ரீப் தக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும், சுகாதார துறை இயக்குனர்களை விசாரணை செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |