திருமணத்திற்கு சென்ற 25 பேர் பலி! பள்ளத்தாக்கில் நிகழ்ந்த கோர விபத்து
இந்த கோர விபத்திற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது
இந்திய பிரதமர், குடியரசு தலைவர், உத்தரகாண்ட் முதல்வர் ஆகிய தலைவர்கள் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டில் மோசமான விபத்தில் 25 பேர் பலியான சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பௌரி கர்வால் மாவட்டத்தில் உள்ள சிம்டி கிராமத்திற்கு அருகே பேருந்து ஒன்று 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்தில் பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து மோசமான விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக 21 பயணிகள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.