வயநாடு நிலச்சரிவில் தமிழர்கள் மாயம்! 25 பேரின் கதி என்ன?
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 358 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
358 பேர் உயிரிழப்பு
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் 358 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணிகள் 5வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் மீட்புக்குழு தேடி வருகிறது.
25 தமிழர்கள்
இந்த நிலையில் நிலச்சரிவில் 25 தமிழர்கள் சிக்கியதாகவும், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர்களில் 22 பேர் வயநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்றும், மூவர் அங்கு சென்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் இந்த தமிழர்கள் வசித்து வந்துள்ளனர்.
முன்னதாக, நிலச்சரிவில் மீட்கப்பட்ட 10,042 பேர், 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |