260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு கவிழ்ந்து பாரிய விபத்து; 140 பேரைக் காணவில்லை
திங்கட்கிழமையன்று, 260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்து பாரிய விபத்தொன்றில் 39 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
140 பேரைக் காணவில்லை
நேற்று, அதாவது, ஜூன் மாதம் 10ஆம் திகதி, திங்கட்கிழமையன்று, 260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்துள்ளது.
49 Migrants Dead, 140 Missing in Shipwreck Off #Yemen Coast .
— IOM Spokesperson (@IOMSpokesperson) June 11, 2024
IOM Press Release with full details here ? ?https://t.co/XLWXVWZV3l pic.twitter.com/zw87GSLlpt
இந்த துயர சம்பவத்தில், 39 பேர் பலியாகியுள்ளார்கள், 140 பேரைக் காணவில்லை என ஐநாவின் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பு, எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படகு ஆப்பிரிக்காவிலிருந்து வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், அதில் பயணித்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |