சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த 28 பேருக்கு உடல் நல பாதிப்பு
கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்ட அவர்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 28 பேருக்கு உடல் நல பாதிப்பு
கேரளாவைச் சேர்ந்த பலர் ஒரு கூட்டமாக கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்களில் 28 பேர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பழைய கோவாவுக்குச் சென்றுள்ளார்கள்.

அங்கு அவர்கள் உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு food poisoning பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு செவ்வாய்கிழமை இரவு தென் கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை கூற, அவர்கள் ஊர் திரும்பவேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தங்கள் சுயவிருப்பப்படி மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |