SL vs AUS 2nd ODI: உலக சாம்பியன் அணியை 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை
சாம்பியன்ஸ் டிராபிக்கு சற்று முன்பு, இலங்கை உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்கள் அடிப்படையில் இலங்கைக்கு எதிரான மிகப்பெரிய ஒருநாள் தோல்வி இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதல் போட்டியில் அந்த அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் துனித் வெல்லாளகே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க மற்றும் அசித் பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
குசல் மெண்டிஸ் சதம் அடித்தார்
இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் 115 பந்துகளில் 101 ஓட்டங்ள் குவித்தார்.
அந்த அணியின் துடுப்பில் நிஷான் மதுஷ்க 70 பந்துகளில் 51 ஓட்டங்களையும் சரித் அசலங்க 66 பந்துகளில் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
SL Vs AUS 2nd ODI, Kusal Mendis, Australia Sri Lanka, Charith Asalanka